சிரியா அரசு மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள் உட்பட 500 பேர் பலி!

February 26, 2018

டமாஸ்கஸ்(26 பிப் 2018): சிரியா அரசு நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பாவி மக்கள் 500 பேர் உட்பட 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசு ஆதரவு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 வருடங்களாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்த சண்டையில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிரியா நாட்டு அரசு கடந்த ஒரு வாரமாக அப்பாவி பொது மக்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றது.. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, நிகழ்த்தப்பட்டு வரும் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் 10க்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிரியாவின் தற்போதைய விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!