நரகமாக மாறும் சிரியாவின் நகரங்கள்!

February 26, 2018

டமாஸ்கஸ்(26 பிப் 2018): சிரியாவில் நடைபெறும் உள்நாடுப்போர் தற்போது கடும் தீவிரமடைந்துள்ள நிலையில் சிரியாவின் அழகிய நகரங்கள் நரகமாக மாறிக்கொண்டிருக்கின்றன.

சிரியாவில் அரசப்படையின் தாக்குதலில் கடந்த வாரத்தில் மட்டும் 520-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள கிழக்கு கௌட்டா நகரத்தின்மீது நேற்று நடத்தப்பட்ட வான்வெளித்தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். அப்போது குளோரின் குண்டுகள் வீசப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூச்சு விட சிரமப்பட்டவண்ணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிரியா அரசு க்ளோரின் குண்டுகள் எதுவும் வீசவில்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஐ.நா போர் நிறுத்தத்திற்கு கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து போர் தீவிரமடைந்துள்ளதால் சிரியாவில் பாதிக்கப்பட்டோருக்கு மருந்துகள், உணவுப் பொருள்கள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!