ஹார்வேர்ட் தமிழ் இருக்கைக்கு சவூதிவாழ் தமிழர்கள் நன்கொடை!

February 28, 2018

ரியாத்(28 பிப் 2018): ஹார்வேர்ட் தமிழ் இருக்கைக்கு சவூதி வாழ் தமிழர்கள் 13,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடை அளித்துள்ளனர்.

380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய உலகின் பல்வேறு தமிழ் அமைப்புகளும் நன்கொடை அளித்து வருகிறது. அச்சீரிய முயற்சி முடிவடையும் தருவாயில் உள்ளது.

ஹார்வேர்ட் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ரியாத்வாழ் தமிழர்களின் சிறுபங்களிப்பை அளிப்பதற்காக மூன்று மாதங்களுக்கு முன் ரியாத் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றம் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் 5000ம் அமெரிக்க டாலர்களை வழங்கியது, பின்னர் ரியாத் தமிழ்ச் சொல்வேந்தர்மன்றம் கடந்த 19-01-2018 அன்று மிகப்பெரிய அளிவில் முப்பெரும் விழா நடத்தி நிதி திரட்டியது.

அந்த விழாவில் ரியாத்வாழ் தமிழர்கள் 5000ம் அமெரிக்க டாலர்கள் உதவினார்கள், இப்படியாக மொத்தம் ரியாத்வாழ் தமிழர்கள் சார்பாக இதுவரை 10,000ம் அமெரிக்க டாலர்கள் உதவியுள்ளோம்.

இதன் நீழ்ச்சியாக தமாம் பகுதியில் வாழும் தமிழர்கள் தமிழ்நாடு சமூகநல அமைப்பு சார்பாக 3000 அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டியுள்ளார்கள், இவ்வாறு சவூதி அரேபியா தமிழர்கள் ஒன்றினைந்து ஹார்வேர்ட் தமிழ் இருக்கைக்காக 13,000ம் அமெரிக்க டாலர்கள் வழங்கியுள்ளார்கள் என்பதனை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல் :
ரியாத் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றம்.
ரியாத் தமிழ்ச் சங்கம்,
தமிழ்நாடு சமூக நல அமைப்பு.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!