சார்ஜா அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து!

March 04, 2018

துபாய் (04 மார்ச் 2018): ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சார்ஜா தாவுன் பகுதியில் உள்ள மூன்று கட்டிடங்கள் ஒருங்கே பெற்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 07:03 மணிக்கு இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீவிபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!