ஜித்தா தமிழ் இஸ்லாமிய கூட்டமைப்பின் முதல் கூட்டம்!

March 10, 2018

ஜித்தா (10 மார்ச் 2018): ஜித்தா தமிழ் இஸ்லாமிய  முதல் கூட்டமைப்பின் முதல் கூட்டம் ஜித்தாவில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு பயாஸ் தலைமை வகித்தார். சிறுவன் அப்துல்லாஹ் குர்ஆன் வசனங்களை (கிராத்) ஓதினார். அல் அமான் பவர் பாயிண்ட் மூலம் தமிழ் இஸ்லாமிய கூட்டமைப்பு குறித்து விளக்கினார். அபுல் அமான் வரவேற்புரை வழங்கினார். அஹ்மத் முஹைதீன், அஹ்மது முஹைதீன் பைஜி, சாதிக் சிக்கந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், ஹாஜா முகைதீன்,ஆதம் அபுல் ஹசன்  ,மஹ்தூம் ஜிஹான் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அப்துல் மஜீத் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை அமீர் சுல்தான் நெறியாள்கை மூலம் நெறிப்படுத்தினார்.

கூட்டத்தில்  பல்வேறு கோரிக்கைகள் வலியறுத்தப்பட்டன. கூட்டத்தில்  சிறப்பு அழைப்பாளராக,  எம்.எல்.ஏ.அபூபக்கர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கடைய நல்லூர் அமைப்பு , மற்றும் காயல் பட்டினம் அமைப்பு ஆகியவையும் மற்றும் இதர தமிழக அமைப்பினரும்  கலந்துகொண்டு சிறப்பித்தனர் 

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!