கண்ணைக் கவரும் பட்டங்களால் நிறைந்த வானம்!

March 10, 2018

தோஹா-கத்தார் (10-03-2018): சர்வதேச பட்டங்கள் விடும் திருவிழா, வளைகுடா நாட்டின் தோஹா (கத்தாரில்) கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதில் சர்வதேச அளவில் பல நாடுகள் கலந்து கொண்டு கலர் கலராய் பிரம்மாண்ட வடிவில் பட்டங்களைப் பறக்க விட்டுள்ளன.

Things to do this weekend in Qatar (March 8 - 10, 2018)

ஒவ்வொரு பட்டமும், ஒவ்வொரு நாட்டின் தனிச்சிறப்புகளைப் பறைசாற்றுவதாக இருக்கிறது என்று இந்நேரம்.காம் செய்தியாளரிடம்,  பார்வையாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தோஹா நகரத்தில் புகழ் பெற்ற பூங்காவான ஆஸ்ப்பைர் பார்க்கில் (Aspire Park) இந்த சர்வதேச பட்ட விழா நடைபெற்று வருகிறது.

சர்வதேச அளவில் பல நாடுகளிலிருந்து, பட்டங்கள் விடும் நிபுணர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். இது குழந்தைகள் மற்றும் பெரியோர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

 

Kites

ஆயிரக்கணக்கானோரை மகிழ்வித்து வரும் இந்த பட்டத் திருவிழா பற்றிய செய்தியினை, கத்தாரில் வசிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கவும்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!