ரியாத்தில் மமக 10 ஆம் ஆண்டு துவக்க விழா!

March 11, 2018

ரியாத் (11 மார்ச் 2018): தமிழ் தஃவா, தமுமுக மற்றும் மமக ரியாத் மத்திய மண்டலம் நடத்திய மமக 10ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற மனிதநேய பெருவிழா கூட்டம் 09/03/2018 அன்று வெள்ளிக்கிழமை கிளாசிக் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மண்டல தமுமுக-மமக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் மண்டல IPP செயலாளர் மெளலவி இப்றாஹிம் அன்வாரி அவர்கள் இறை போதனை நிகழ்த்தினார். மண்டல மமக துணைச் செயலாளர் நல்லூர் மசூதுஜீன்னா அவர்கள் வரவேற்புரையாற்ற, நஸீம் கிளையின் செயலாளர் லால்குடி ரஹ்மத்துல்லா அவர்கள் மமக கழகப் பாடலைப் பாடினார்.

மண்டல தமுமுக செயலாளர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் இந்திய முஸ்லிம்களின் அரசியல் நிலையும் அதில் மமகவின் பங்களிப்பும் என்ற தலைப்பில் தலைமை உரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு தோழமைக் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

ரியாத் திமுக கழக பேச்சாளர் சத்திய சீலன்,செந்தமிழர் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இறைநேசன்,அனைத்து இஸ்லாமிய மற்றும் அரசியல் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் ஷாகுல் ஹமீது அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து சகோதரர் கஜ்ஜாலி அவர்கள் understand Quran வகுப்பு பற்றி விளக்கம் அளித்தார். வாழ்த்துரையின் தொடர்ச்சியாக, மண்டல தமுமுக பொருளாளர் சகோ.சீர்காழி ஜர்ஜீஸ் அவர்களும், நஸீம் கிளைத் தலைவர் அலி உஸ்மான் அவர்களும், தமுமுக மண்டல துணைச் செயலாளர் நல்லூர் ரஹ்மத்துல்லா அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி அவர்களின் (சொற்களால் ஒரு சுதந்திரப் போர்) நூல் அறிமுகத்தை பத்தாஹ் கிளைத் தலைவர் இனாம் குளத்தூர் அப்துல் ஹக் நூல் குறித்து விளக்கம் அளிக்க, இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மமக துனணச் செயலாளர் நம்புதளை பாரீஸ் அவர்கள் நூலை வெளியிட அதை தோழமைக் கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தாயகத்திலிருந்து கானொளி மூலம் மமக கொள்கைப் பரப்புச் செயலாளர் கோவை செய்யது அவர்களும் மமக மாநில பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்களும் எழுச்சியுரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியின் தீர்மானங்களை பத்தாஹ் ,அஜிஜியா ,நியுசெனையா,மலாஸ் மற்றும் சுலைமானிய , நஸீம், முர்சலாத் கிளை நிர்வாகிகள் வாசித்தனர். இறுதியாக மண்டல மமக துணை செயலாளர் மங்களக்குடி தாஹா ரசூல் அவர்களின் நன்றியுரைடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியை மண்டல மமக செயலாளர் ஆரூர் நிசார் அலி அவர்கள் தொகுத்து வழங்கினார்.அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு மண்டல கிளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் தோழமை கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்..

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!