ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்ற விமானம் விபத்து!

March 12, 2018

இஸ்தான்பூல் (12 மார்ச் 2018): ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி சென்ற விமானம், கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணம் செய்த 11 பேர் பலியாகியுள்ளனர்.

துருக்கி நாட்டு தொழிலதிபரான ஹுசைன் பசரன் என்பவருக்கு சொந்தமான அந்த விமானத்தில் அவரின் மகளும் அவரது தோழிகள் 7 பேர் உடபட 11 பேர் அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்நிலையில் ஈரான் நாட்டு மலைப்பகுதியில் விமானம் சென்றபோது எதிர்பாரதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

துபாயில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு சென்ற ஹுசைன் பசரன் மகளுக்கு வரும் 14 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் இந்த விபத்தில் பலியாகி உள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!