மக்கா, மதீனாவில் சவூதி நாட்டினருக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க முடிவு!

March 13, 2018

ரியாத் (13 மார்ச் 2018): மக்கா மற்றும் மதீனா ஆகிய இரண்டு பெரிய மசூதி வளாகங்களில் சவூதி நாட்டினருக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்று சவூதி சூரா கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

சவூதியில் சமீப காலமாக வெளி நாட்டினர் பணிபுரிந்த அனைத்து துறைகளிலும் சவூதி நாட்டினருக்கு வேலை வாய்ப்பை அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக முஸ்லிம்களின் புனித இடங்களான மக்கா, மதீனா ஆகிய மசூதி வளாகங்களில் உள்ள அனைத்து துறைகளிலும் சவூதி நாட்டினருக்கு வேலை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு சூரா கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

அதன் படி இதன் மூலம் முடி திருத்தகம் உள்ளிட்ட வெளி நாட்டினர் மட்டுமே பணிபுரியும் துறைகளில் சவூதி நாட்டினருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சூரா கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் ஆயிரக் கணக்கான சவூதி நாட்டினர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்றும் சூரா கவுன்சில் தெரிவித்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!