பாலஸ்தீன் பிரதமர் மீது கொலை முயற்சி!

March 13, 2018
பகிருங்கள்:

காசா (13 மார்ச் 2018): பாலஸ்தீன் பிரதமர் ரமி ஹம்துல்லா பயணம் மேற் கொண்ட வாகனம் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

காசா பகுதிக்கு சென்ற ரமி ஹம்துல்லாவின் வாகனம் மீது நடத்தப் பட்ட தாக்குதலில் வகனம் சேதம் அடைந்த போதிலும் ரமி ஹம்துல்லா அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்த தாக்குதலை யார் நடத்தினார் என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. எனினும் ரமி ஹம்துல்லா ஹமாஸ் அமைபின் மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதலை பாலஸ்தீன அதிபர் முஹம்மது அப்பாஸ் கடுமையாக கண்டித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!