சவூதி இந்திய பள்ளியில் கல்விக் கட்டண உயர்வுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு!

March 13, 2018

ஜித்தா (13 மார்ச் 2018): சவூதி இந்திய பள்ளியில் கல்விக் கட்டணம் உயர்த்தப் படவுள்ளதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சவூதியில் கல்விக் கட்டணங்கள் உயர்த்தப் படவுள்ளன. குறிப்பாக இந்திய பள்ளிகளில் உயர்த்தப் படவுள்ள கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்று தமிழக, கேரள பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இரு மாநில பெற்றோர்கள் சார்பாக ஜித்தா சர்வதேச இந்திய தூதரக பள்ளி முதல்வரை சந்தித்த பெற்றோர் கல்வி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சமீபத்திய சவூதி நிலமையை கருத்தில் கொண்டு இதர கல்விச் செலவுகளை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

தமிழகம் சார்பில் கலந்துகொண்டவர்களில் தமிழகம் சார்பில், அல்தாஃப் ஹுசைன், அப்துல் அஜீஸ், ஜோதி குமார், ஷாஜஹான், தாஜுத்தீன், ஷரீஃப், முஹம்மது ஃபாரூக், மூசா சிக்கந்தர், நிஜார், ஹனீஃபா மற்றும் ஹாஜா முஹைதீன் ஆகியோர் உடனிருந்தனர். 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!