சவூதி நாட்டினருக்கு அரபி ஆங்கிலம் தவிர பிற மொழிகள் பயிற்சி!

March 15, 2018

ரியாத் (15 மார்ச் 2018): சவூதி நாட்டினர் அரபி ஆங்கிலம் தவிர உலகின் பிற மொழிகளும் பேசும் அளவில் பயிற்சி அளிக்க பல்கலை கழகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

சவூதியில் அந்நாட்டினருக்கு வேலை வாய்பை அதிகரிக்கும் வகையில் பல துறைகளில் சவூதி நாட்டினர் மட்டுமே பணிபுரிய முடியும் என்கிற சட்ட வரைவு ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி மொபைல் கடைகள், ஜுவல்லரி கடைகளில் வெளிநாட்டினர் பணிபுரிய முடியாது.

மேலும் வெளிநாட்டினர் பணிபுரிந்த பெரும்பாலான துறைகளில் சவூதி நாட்டினரை பணியில் சேர்க்க பல நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அரசுப் பணியில் சேர்பவர்கள், அரபி , ஆங்கிலம் தவிர உலகின் சில முக்கிய மொழிகளையும் கற்று இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்காக சவூதியில் உள்ள பல்கலைக் கழகங்களில் சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. குறிப்பாக ஆங்கிலம், பிரெஞ்சு, உருது, துருக்கிஷ், இந்தோனேஷியா ஆகிய மொழிகள் முக்கியமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இதன் மூலம் விமான நிலையங்கள், மக்கா, மதீனா ஆகிய பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மேலும் ஹஜ் சர்வீஸ் ஊழியர்கள் என அரசு சார் பணியாளர்கள் வெளிநாட்டு மொழிகள் கற்றிருந்தால் கூடுதல் தகுதியாக கருதப் படுகிறது. இதன் மூலம் அரபி மற்றும் ஆங்கிலம் தெரியாத வெளிநாட்டினர் பேசும் மொழியினை அவர்கள் இலகுவாக புரிந்து கொள்ள முடியும் என கருதப் படுகிறது. குறிப்பாக ஹஜ், உம்ரா வரும் வெளிநாட்டினருக்கு உதவ பிற மொழிகளையும் கற்றுக் கொள்வது அவசியமாகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!