ஜித்தா தமிழ் மன்றத்தின் மாபெரும் தமிழ் கலை நிகழ்ச்சி!

March 22, 2018

ஜித்தா (22 மார்ச் 2018): சவூதி அரேபியா. 'ஜித்தா தமிழ் மன்றம்' சார்பில் மியான் கானின் "தமிழ் கலைப் பண்பாட்டுத் திருவிழா வருகிற ஏப்ரல் 28 -ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு ஜித்தா மன்னர் அப்துல் அஜிஸ் சாலை பின்புற மைதானத்தில் மாபெரும் தமிழ் கலை விழா நிகழ்ச்சி ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிகழ்ச்சியில் இயக்குனர் கே. பாக்யராஜ், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் விஜய் டி. வி. "கலக்கப்போவது யாரு" புகழ் 'அறந்தாங்கி' நிஷா, தினேஷ், விக்னேஷ் சிவா, தௌபிக், 'வடிவேலு' பாலாஜி, சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ, நிகில் மாத்யூ மற்றும் ரேடியோ மிர்ச்சி பைசல் ஆகியோர் கலந்துக்கொள்கின்றனர்.

ரியாத், தமாம் ஆகிய இடங்களை தொடர்ந்து ஜித்தாவில் நடக்க இருக்கும் இந்த மாபெரும் கலை நிகழ்ச்சிக்கு ஏராளமான பிரமுகர்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர். இந்த நிகழ்ச்சிப் பற்றி மேலும் விபரம் தெரிந்துக்கொள்வதர்க்கு 0509017242 என்ற செல்பேசி எண்ணை தொடர்புக்கொள்ளலாம். மேலும் டிக்கெட்-க்கு சரபியாஹ் ஆர்யாஸ் உணவகத்தை அணுகலாம்.

இந்த நிகழ்ச்சிக்கு வரும் தமிழ் சான்றோர்களை "ஜித்தா தமிழ் மன்றம்" நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.

Jeddah Ticket Costs (Entry Fee Only):
VIP: SR 200 (Front Row)
Regular: SR 100 (Middle Row)
*Discounted: SR 50 (Back Row)
*Limited Period Only/Jeddah

ரசிக பெருமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்று (22/03/2018) முதல் 500 டிக்கெட்டுகள் ஜித்தா தமிழ் மன்றத்தின் அனுசரணையில் 50% தள்ளுபடியுடன் SR 50-க்கு விற்பனை துவங்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!