சவூதியை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை சவூதி படை சுட்டு வீழ்த்தியது!

March 26, 2018

ரியாத் (26 மார்ச் 2018): சவூதி அரேபியா மீது ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணகளை சவூதி படை சுட்டு வீழ்த்தியுள்ளது.

ஏமனில் உள்ள ஹூத்தியினரால் ஞாயிறு இரவு ரியாத், நஜ்ரா மற்றும் கமீஸ் முஸைத் ஆகிய பகுதிகள் மீது ஹுத்தி படையினர் ஏவுகணை வீசியுள்ளனர். இவை சவூதி படையினரால் முறியடிக்கப் பட்டுள்ளன. பொதுமக்கள் குடியிருப்பு பகுதியை நோக்கி இந்த ஏவுகணை வீசப் பட்டதாக தெரிகிறது.

கடந்த வருடம் நவம்பர் 4 ஆம் தேதியும் சவூதி ரியாத் விமான நிலையம் மீது ஹூத்தி படையினர் ஏவிய ஏவுகணை சவூதி படையினரால் முறியடிக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!