கேன்சர் சிகிச்சை அனைவருக்கும் முற்றிலும் இலவசம் - அரசு அறிவிப்பு!

March 27, 2018

இந்தியா போன்ற நாடுகளில் அரசு மருத்துவமனைகள் தரம் குறைந்தும், தனியார் மருத்துவமனைகள் உயர் தரத்துடன் இருப்பதும் வழக்கம்.

இதற்கு நேர்மாறாக, வளைகுடா நாடுகளில் அரசு மருத்துவமனைகள் உயர்தர சிகிச்சைகளுக்கு மிகவும் பிரபலமானவையாகும். ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல் காட்சியளிக்கும் இவற்றில், சர்வதேச தரத்திலான சிகிச்சைகள் மிகக் குறைந்த செலவில் கிடைக்கும்.

கத்தாரில் உள்ள அரசு மருத்துவமனையான ஹாமத் மெடிக்கல் கார்ப்பரேஷன் (HMC) இந்த அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

HMC யில் பணியாற்றும் மூத்த மருத்துவரான ஒஸாமா அல் ஹொம்ஸி செய்தியாளர்கள் சந்திப்பில் இதைத் தெரிவித்தார்.

அதன்படி, கத்தாரில் உள்ளூர் குடிமகன்கள் உட்பட, பணியாற்றும் வெளிநாட்டினர் அனைவரும் இந்த திட்டத்தின் மூலம், கேன்சர் நோயில் பாதிக்கப் பட்ட எவரும், 100% இலவச சிகிச்சை செய்து கொள்ள முடியும். நோயாளிகளுக்குத் தேவையான  அனைத்து செலவுகளையும் அரசே பொறுப்பேற்றுக் கொள்ளும்.

இந்த அறிவிப்பு, கத்தரில் பணிபுரியும் பல்வேறு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!