பஹ்ரைனில் வரலாறு காணாத அளவில் புதிய எண்ணெய் கிணறு கண்டு பிடிப்பு!

April 06, 2018

பஹ்ரைன் (06 ஏப் 2018): வளைகுடா தீவு நாடான பஹ்ரைனில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த எண்ணெய் வளத்தைவிட புதிய எண்ணெய் கிணறு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

பஹ்ரைனின் மேற்கு கடற்கரையில் கலீஜ் அல் பஹ்ரைன் பேசின் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வயலில் 28 முதல் 56 ஆயிரம் கோடி கன மீட்டர் இயற்கை வாயு இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இவை பஹ்ரைனை உலக சந்தையில் எண்ணெய் வளத்தில் செல்வாக்குள்ள நாடாக மாற்றும் என்று பஹ்ரைன் அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றன.

இந்த கண்டுபிடிப்புக்கு முன்னதாக பஹ்ரைன் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளத்தை பொருத்தவரையில், சுமார் 12.5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயையும், 9,200 கோடி கன மீட்டர் இயற்கை வாயுவையும் மட்டுமே கொண்டிருந்தது.

ஒப்பீட்டளவில், பஹ்ரைனின் பக்கத்து நாடான மற்றும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக விளங்கிய சவூதி அரேபியா 2 லட்சத்து 66 ஆயிரம் கோடி பீப்பாய் அளவுக்கு எண்ணெய் வளத்தை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சவூதி அரேபியாவுடன் பஹ்ரைன் பகிர்ந்து கொண்டுள்ள அபு சாஃபா வயலில் இருந்தும் தினமும் 1.5 லட்சம் பீப்பாய் எண்ணெய் பஹ்ரைனுக்கு கிடைத்துவருகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!