குவைத் பொது மன்னிப்பு காலம் மேலும் நீட்டிப்பு!

April 07, 2018

குவைத் (07 ஏப் 2018): குவைத் நாட்டில் சட்ட விரோதமாக தங்கி இருப்போர், தங்களது நாட்டுக்குத் திரும்பி செல்வதற்கான காலக் கெடுவை மேன்மேலும் நீட்டித்து குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.

குவைத் அரசு சட்டத்திற்கு விரோதமாக உள்ள வெளிநாட்டவர்கள் 2018 ஜனவரி 29 முதல் பிப்ரவரி 22 வரை தங்களது ஆவணங்களைச் சமர்ப்பித்து எந்த அபராதமும் இல்லாமல் பொது மன்னிப்பு பெற்று சொந்த நாடுகள் திரும்பி செல்லலாம் என்று தெரிவித்து இருந்தது.

பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய காலக்கெடு தற்போது ஏப்ரல் 22, 2018 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை குவைத் துணை பிரதாமர் மற்றும் உள்துறை அமைச்சரான ஷேக் அலி முகமது அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அதே நேரம் ரெசிடென்சி விதிமீறல் பிரச்சனைகள் காரணமாக நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் விசா காலம் முடிந்தும் சொந்த நாடுகள் திரும்பி செல்ல முடியாமல் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லாததால் அருகில் உள்ள ரெசிடென்சி விவகாரத் துறையினை அணுகுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!