சிரியாவில் மீண்டும் குழந்தைகளை குறி வைத்து ரசாயனத் தாக்குதல்!

April 08, 2018

டமாஸ்கஸ் (08 ஏப் 2018): சிரியாவில் மீண்டும் ரசாயனத் தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது.

சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் உத்தரவின்பேரில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஷ்யா உதவி இல்லாமல் இது போன்ற தாக்குதல் நடைபெறாது என்று அமெரிக்கா கூறியுள்ளது. அண்மையில் இதுபோன்ற தாக்குதல் கவுடாவில் நடத்தப்பட்டது. அப்போதும் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்தனர். இதனை முடிவிற்கு கொண்டு வர ஐநா சபை கொண்டுவந்த முயற்சிகள் பலன் தரவில்லை.

ஹெலிகாப்டரில் சென்ற ராணுவ வீரர்கள் மக்கள் வசிக்கும் இடங்களில் சரின் எனப்படும் ரசாயன குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் குழந்தைகள் உட்பட 70 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே சிரிய ஆரசு ரசாயன தாக்குதல் நடத்தி உலக நாடுகள் எதிர்த்த நிலையில் மீண்டும் ரசாயன தாக்குதல் நடத்தியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!