சிரியா அரசுப் படை தளங்கள் மீது தாக்குதல் - 100 பேர் பலி!

April 09, 2018

டமாஸ்கஸ் (09 ஏப் 2018): சிரியாவின் அரசுப் படை தளங்கள் மீது வான் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளன. இந்த தாக்குதலில் 100 க்கும் அதிகமானோர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப் படுகிறது.

சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் குறிப்பாக சிரியா ராணுவம் கெமிக்கல் குண்டுகளை பயன்படுத்தி இருக்கிறது. இதில் குழந்தைகள் உட்பட பல அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இந்த கெமிக்கல் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.

சிரியா அரசு படையின் இந்த மோசமான நடவடிக்கைக்கு நேற்று அமெரிக்க அதிபர் எதிர்ப்பு தெரிவித்தார். டொனால்ட் டிரம்ப் இது குறித்து ''சிரியா நடத்திய கெமிக்கல் குண்டு தாக்குதலை பொறுத்துக் கொள்ள முடியாது. சிரியா, ஈராக், ரஷ்யா மூன்று நாடுகளும் சேர்ந்து போர் விதிமுறைகளை மீறி வருகிறது. சிரியா அதிபர் இதில் மிகவும் மோசமாக நடந்து வருகிறார்'' என்று குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு சிரியா ராணுவத்தின் தைப்பூர் விமான படைத்தளத்தில் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த தக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியானதாகவும் இந்த தாக்குதலை அமெரிக்காதான் நடத்தியுள்ளது என்று சிரியா அரசு குற்றஞ் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!