ஒமானில் ததஜ இரத்த தான முகாம்!

ஏப்ரல் 15, 2018

மஸ்கட் (15 ஏப் 2018): மஸ்கட் ஒமானில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

இரத்தம் சிந்தி பொருளாதாரத்தை ஈட்ட சென்ற அயல் நாட்டில் பணிபுரிந்து கொண்டு தங்களது விடுமுறை நாட்களிலும் கூட மார்க்க பணியுடனுன் மனித நேய பணியையும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வளைகுடா மண்டலங்கள், தமிழக கிளைகள் மற்றும் மாவட்டங்களுக்கு நிகராக பிராமாண்ட இரத்த தான முகாம்களை நடத்தி ஆயிரக்கணக்கான யூனிட் இரத்ததை கொடையாக வழங்கி வருகிறது

அதனடிப்படையில் ஓமான் DIRECOTARATE GENERAL OF BLOOD SERVICE உடன் இனைந்து 12வது மாபெரும் இரத்தானம் முகாம் மஸ்கட் ரூவி பகுதியில் KM.Trading car parking ல் மொபைல் இரத்ததானம் முகாம் வண்டியில் வைத்து மாலை 4.30மணி முதல் இரவு 9.00 மணிவரை நடைபெற்றது இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தகுதி அடிப்படையில் 30நபர்கள் இரத்த கொடை அளித்தனர்இதில் தமிழ் பேசும் சகோதரர்கள் மட்டுமல்லாமல் நமது அண்டை மாநில சகோதரர்களும் கணிசமாக கலந்துக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்,

மஸ்கட் மண்டல இரத்தான ஏற்பாட்டாளர் சகோ. நிஜாமுதீன் அவர்கள் கூறுகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – மண்டலம் சார்பாக இதுவரை 12 இரத்த தான முகாம்கள் மஸ்கட் மாநகரில் மட்டும் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடதக்கது என்றும் நமது இந்த மனித நேய பணியை பாராட்டி ஓமான் சுகாதாரத்துறை சார்பாகவும், மருத்துவமனை சார்பாகவும் விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது என்று கூறினார்.

மஸ்கட் மண்டலத்தின் தலைவர் சகோ:ஜமால்தீன் அவர்கள் கூறும் பொழுது..... இரத்த தானம் நடத்துவதின் நோக்கத்தை பற்றி கூறும் போது திருக்குர்ஆன் 5 அத்தியாயம் 32 வசனம் “யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” என்ற இறை வசனத்தை நடைமுறைப்படுத்தி முஸ்லிம்கள் மனித நேயத்தை நேசிக்ககூடியவர்கள் என்றும் ஆனால் இன்றைய மீடியாக்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்து வருவதை களையவே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனின் நற்கூலியை எதிர்பார்த்து இந்த பணியை செய்து வருவதாக கூறினார். கடந்த 5 வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – மஸ்கட் மண்டலம் தொடர்ந்து இரத்தானம் முகாம் நடக்கிறது எனவும் அடுத்த முகாம் நமது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்

இந்த முகாமின் அனைத்து ஏற்பாட்டினையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மஸ்கட் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!