சவூதி விசிட் விசா தொடர்பான வதந்திக்கு முற்றுப் புள்ளி!

May 05, 2018

ரியாத் (05 மே 2018): சவூதியில் விசிட் விசா தொகை குறைக்கப் பட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்று சவூதி விசா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவூதி விசிட் விசா 2000 ரியாலிலிருந்து 300 ஆக குறைக்கப் பட்டதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலானது. இந்த தகவல் பொய்யானது என்று தற்போது சவூதி விசா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பொய்யான தகவல் தருபவர்கள் குறைந்த அளவு புத்தியை உபயோகிக்க வேண்டும் என்றும், அந்த தகவல் எங்கிருந்து வந்தது என்று ஆராயாமல், இதுபோன்று சமூக வலைதளங்களில் வரும் பொய்யான தகவல்களை பகிர்வதை தவிற்க வேண்டும் என்று சவூதி விசா அமைச்சகம் எச்சரித்துள்ளது.

Source: Saudi Gazette

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!