மக்கா மதீனா ரெயில் போக்குவரத்து செப்டம்பரில் தொடங்கும்!

May 19, 2018

ஜித்தா (19 மே 2018): மக்கா - மதீனா இடையேயான ரெயில்வே போக்குவரத்து வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும்.

மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையே போக்குவரத்தை துரிதப் படுத்தும் விதமாக ரெயில்வே போக்குவரத்து திட்டம் தொடங்கப் பட்டு பணி பூர்த்தியாகும் நிலையில் வரும் செப்டம்பர் மாதம் முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கும். ஆரம்பக் கட்டமாக வாரத்திற்கு நான்கு முறை செயல்படுத்தப்படும் இந்த ரெயில் போக்குவரத்து பின்பு அதிகரிக்கப் படும் என எதிர் பார்க்கப் படுகிறது.

2011 ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டம் 2016 ல் முடிவடையும் என எதிர் பார்க்கப் பட்டது. எனினும் வானிலை மற்றும் மணல் காற்று உள்ளிட்ட காரணங்களால் பணி நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டது.

சுமார் 444 கி.மீ தூரம் உள்ள இந்த மக்கா மதீனா ரெயில்வே போக்குவரத்து தூரம், உம்ரா மற்றும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு இலகுவானதாக இருக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!