மக்காவில் கிரேன் கவிழ்ந்து விபத்து!

May 21, 2018

மக்கா (21 மே 2018): மக்கா ஹரம் பள்ளியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மக்காவில் ஹரம் பள்ளி விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. எனினும் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் அப்பகுதியில் பொதுமக்களுக்கோ யாத்ரீகர்களுக்கோ அங்கு அனுமதி இல்லை என்பதால் உயிர் சேதம் எதுவும் இல்லை.

கிரேன் ஆப்பரேட்டருக்கு மட்டும் சிறிய காயம் ஏற்பட்டதாக கூறப் படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு மக்கா ஹரம் பள்ளியில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!