மக்காவில் ரமலானை முன்னிட்டு ஹோட்டல்கள் நிரம்பியது!

May 22, 2018

மக்கா (22 மே 2018): புனித மக்காவில் ரமலானை முன்னிட்டு அனைத்து ஹோட்டல்களும் நிரம்பியது.

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது மேன்மையானதாகும். இம்மாதத்தின் இறுதி பத்து நாட்கள் 'லைலத்துல் கத்ர்' என்னும் ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும். இந்த நாட்களில் இறைவனை வழிபடுவதை அனைத்து முஸ்லிம்களும் முக்கியமாக கருதுகின்றனர். குறிப்பாக மக்காவில் இந்த 10 நாட்களில் உம்ரா யாத்ரீகர்கள் அதிகம் நிரம்புவார்கள்.

இதன் அடிப்படையில் மக்காவைச் சுற்றியுள்ள அனைத்து ஹோட்டல்களும் 98 சதவீதம் வரை முன்பதிவு செய்யப் பட்டுவிட்டன. மேலும் கடைசி 10 இரவுகளுக்கான முன் பதிவுகள் 25,000 முதல் 42,000 சவுதி ரியால்கள் வரை கட்டணமாக வசூலிக்கப் படுவதாக கூறப்படுகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!