இஸ்ரேல் தாக்குதலில் மருத்துவ முதலுதவி குழுவில் இருந்த இளம் பெண் படுகொலை!

June 02, 2018

காஸா (02 ஜூன் 2018): காஸா எல்லையில் மருத்துவ முதலுதவி குழுவில் பணியாற்றி வந்த ரஸான் அஷ்ரஃப் நஜ்ஜார் (21) என்ற பெண் இஸ்ரேலின் IDF என்னும் இஸ்ரேலிய படையினரால் கொல்லப் பட்டுள்ளார்.

கிரேட் ரிட்டர்ன் மார்ச் போராட்டத்தில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டு காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த ரஸான் அஷ்ரஃப் நஜ்ஜார் வெள்ளிக்கிழமை மாலை இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். அவர் கைகளை உயர்த்தி உதவி கோரிய போதும் ஈவு இரக்கமற்ற இஸ்ரேலிய ராணுவம் அவரை கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளது.

மருத்துவ சீறுடையுடன் அவர் கொல்லப் பட்ட நிலையில் அவருடைய உடலை கண்ட அவரது தாய் கான் யூனுஸ் மயக்கமுற்றுள்ளார்.

ரஸான் அஷ்ரஃபுக்கு ஏற்கனவே மிரட்டல் இருந்துள்ளது. எனினும் அதற்கு அஞ்சாத அவர் கடைசியாக இட்ட ஃபேஸ்புக் பதிவில், "என் நெஞ்சைப் பார்த்து உங்கள் புல்லட்களால் சுடுங்கள் அதற்கு நான் அஞ்சப் போவதில்லை" என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!