கத்தார் யாத்ரீகர்களுக்கு தடை இல்லை - சவூதி அரேபியா அறிவிப்பு!

June 06, 2018

ஜித்தா (06 ஜூன் 2018): கத்தாரிலிருந்து உம்ரா, ஹஜ் மேற்கொள்ள வரும் யாத்ரீகர்களுக்கு தடையில்லை என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

கத்தார் நாட்டுடன் சவூதி யூ.ஏ.இ, பஹ்ரைன் மற்றும் எகிப்து நாடுகள் தொடர்பை துண்டித்துள்ள நிலையில் சவுதி அரேபியா கத்தார் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டாலும் சுமூகமான நிலை ஏற்படவில்லை.

இந்நிலையில் கத்தாரிலிருந்து புனித மெக்காவிற்கு வரும் யாத்ரீகர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது. அனுமதிக்கப் பட்ட ஏஜெண்டுகள் மற்றும் இணையதளங்கள் மூலம் யாத்ரீகர்கள் ஹஜ் மற்றும் உம்ராவிற்கு விண்ணப்பிக்க சவூதி அனுமதி அளித்துள்ளது. மேலும் கத்தார் ஏர்வேய்ஸ் விமானம் தவிர வேறு விமானங்களிலும் யாத்ரீகர்கள் ஜித்தா வருவதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

சென்ற ஆண்டு கத்தர் ஹஜ் யாத்ரீகர்களுக்கும் சவூதி அரேபியா அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Search!