இந்திய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற சவூதி அதிகாரிகள் இந்தியா பயணம்!

June 26, 2018

ரியாத் (26 ஜூன் 2018): இந்திய பாதுகாப்பு அகாடமியில் (NDA) பயிற்சி பெற ஐந்து பேர் கொண்ட சவூதி அதிகாரிகள் குழு இந்தியா பயணம் மேற்கொள்கிறது.

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள காதாஸ்க்வஸ்லாவில் உள்ள என்.டி.ஏ.யில் ஜூன் 27 ம் தேதி தொடங்கும் மூன்று ஆண்டு பயிற்சியில், ராணுவத்தின் பல்வேறு நுணுக்கங்கள் பயிற்றுவிக்கப்படும் நுட்பங்கள், பல பயிற்றுவிக்கப் படும், இதில் பங்கேற்கும் ஐந்து பேர் கொண்ட குழுவில், ஷயா ஜப்பார் அல்காம்தி, எஸ்ஸாம் அல் ஒதைபி, ஃப்ஹத் அல் கஹ்தானி, நவாஃப் அல் ஷஹ்ரானி மற்றும் யாசர் அல் ஃபர்ஹான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே ஒரு குழு இந்திய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்றுள்ள நிலையில் இது இரண்டாவது குழுவாகும்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்த குழுவை சவூதிக்கான இந்திய தூதுவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!