சவூதியில் கார் ஓட்ட உரிமம் பெற்ற முதல் இந்திய பெண்!

June 30, 2018

ரியாத் (30 ஜூன் 2018): சவூதியில் கார் ஓட்ட உரிமம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை சாரம்மா தாமஸ் என்ற நர்ஸ் பெற்றுள்ளார்.

சவூதியில் பெண்கள் கார் ஓட்ட இருந்து வந்த தடை நீக்கப் பட்டதை அடுத்து அங்கு பெண்கள் உரிமம் பெற்று கார் ஓட்ட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சவுதி அரேபியாவில் கார் ஓட்ட டிரைவிங் லைசென்சு (உரிமம்) பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை சாரம்மா தாமஸ் பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியை சேர்ந்தவர். இவர் சவுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நர்சு ஆக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே இந்திய ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளார். இந்த நிலையில் சவுதி அரேபியாவில் கார் ஓட்ட உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு கார் ஓட்டும் சோதனையும் கண் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இவற்றில் அவர் தேறியதால் ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!