இஸ்ரேல் தாக்குதலில் சிறுவன் உட்பட பாலஸ்தீனர்கள் இருவர் பலி!

June 30, 2018

காஸா (30 ஜூன் 2018): இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனர்கள் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் அரசு பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். அதோடு அங்கு அமெரிக்க தூதரகமும் திறக்கப்பட்டது. இதனால் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் கடந்த சில வாரங்களாக காசா எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை காசா எல்லையோரத்தில் உள்ள தடுப்பு வேலியின் அருகே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர். போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஒரு 14 வயது நிறுவன் உட்பட இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 415 பேர் காயமடைந்துள்ளதாக காஸா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!