எமிரேட்ஸ் விமானத்தில் இந்திய உணவுகளுக்கு தடை!

July 04, 2018

துபாய் (04 ஜூலை 2018): எமிரேட்ஸ் விமானத்தில் வழங்கப் படும் உணவுகளில் இந்து உணவுகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

துபாய் விமான நிறுவனங்களில் ஒன்று எமிரேட்ஸ் விமான நிறுவனம். இதில் இந்திய உணவுகளுக்கு தடை விதித்திருப்பதோடு, தனது உணவு மெனுவில் இருந்து இந்திய உணவுகளை நிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு அந்தந்த நாட்டு விமான நிறுவனங்கள் இந்தியர்களின் விருப்ப உணவு வகைகளை மெனுவாக வைத்துள்ளன. அப்படி எமிரேட்ஸ் விமான நிறுவனமும் மெனுவை கடைபிடித்து வந்த நிலையில், தற்போது இந்திய மெனுவை நீக்கியுயள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் நிறுவனம் சுகாதார மற்றும் உணவு தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. எங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை கருத்தில் கொள்வது எங்கள் சேவைத் திறனை மேம்படுத்த உதவும். மேலும் இந்துப் பயணிகள் விமானத்தில் கொடுக்கப்படும் இந்திய உணவு வகை அல்லாத சைவ மற்றும் அசைவ உணவுகளை தேர்வு செய்து கொள்ளலாம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!