துபை சுற்றுச் சூழல் பாதுகாப்பு தூதரான 10 வயது இந்திய சிறுவன்!

July 05, 2018

துபை (05 ஜூலை 2018): துபாயின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தூதர் என்ற கவுரவம் 10 வயது இந்திய சிறுவன் ஃபயாஸ் அஹமதுவுக்கு வழங்கப் பட்டுள்ளது.

ஃபயாஸ் அஹமது, துபாயில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைக்கு வருபவர்களுக்கு பாலித்தீன் பை பயன்படுத்துவதற்கு பதில் தனது சேமிப்பு பணத்தில் துணிப்பை வாங்கிக் கொடுப்பதுடன் அதிலேயே பொருட்களை வாங்க வேண்டி வலியுறுத்தினார்.

சிறுவனின் இச்செயல் துபை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் துபை நகராட்சிக்கு சிறுவனின் செயல் கவனத்துக்கு சென்றது. இதனை அடுத்து ஃபயாஸ் அஹமதுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு தூதர் என்ற கவுரவத்தை நகராட்சி நிர்வாகம் ஃபயாஸ் அஹமதுக்கு வழங்கி கவுரவித்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!