அபுதாபியில் காணாமல் போன இந்தியர் பிணமாக மீட்பு!

July 17, 2018

அபுதாபி (17 ஜூலை 2018): அபுதாபியில் காணாமல் போன இந்தியர் பிணமாக மீட்கப் பட்டுள்ளார்.

கேரளா கன்னூரைச் சேர்ந்த ஜபார் கே.பி, இவர் அபுதாபியில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை, ஆனால் ஒருவாரத்திற்கு பின்பு முஸஃபா என்ற பகுதியில் அவர் பிணமாக கிடந்துள்ளார்.

தகவல் அறிந்த போலீசார் கைபற்றிய உடலை அடையாளம் காண்பதற்காக மார்ச்சுவரியில் வைத்திருந்தனர். இதனை அடுத்து ஜபாரின் சகோதரர் முனீர் வரவழைக்கப் பட்டு அடையாளம் காண்பித்த பிறகு அது ஜபாரின் உடல் என்பதை போலீசார் உறுதி செய்தனர். ஜபாருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஜபாரின் மர்ம மரணம் குறித்து அபுதாபி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!