ஹஜ் செய்ய அனுமதி இல்லாத சவூதி வாழ் மக்கள் மக்காவில் நுழைய தடை!

July 24, 2018

ஜித்தா (24 ஜூலை 2018): ஹஜ் செய்ய அனுமதி இல்லாத சவூதி வாழ் மக்கள் புனித மக்காவில் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது.

உலகெங்கிலும் இருந்து ஹஜ் யாத்ரீகர்கள் மக்காவை நோக்கி வர தொடங்கிவிட்ட நிலையில் சவூதி வாழ் மக்கள் யாரும் புனித மக்காவில் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும் மக்காவில் வசிக்க அனுமதி பெற்றவர்கள், ஹஜ் செய்ய அனுமதி பெற்றவர்கள் மற்றும் ஹஜ் தொடர்ப்பான சேவைக்கு அரசு அனுமதி பெற்றவர்கள் தவிர யாரும் புனித மக்காவில் நுழைய அனுமதி இல்லை.

இந்நிலையில் தடையை மீறி செல்ல முயற்சித்த 30,449 வாகனங்கள் திருப்பிவிடப் பட்டன. மேலும் 72,037 பேரும் புனித மக்கா எல்லையிலிருந்து திருப்பி விடப் பட்டனர். ஹஜ் யாத்ரீகர்களின் சிரமத்தை குறைக்க இந்த விதிமுறை ஹஜ் காலங்களில் தொடர்ந்து பின்பற்றப் பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!