ஹஜ் கமிட்டி மூலம் வந்த முதல் ஹஜ் குழு மக்கா வந்தடைந்தது!

July 24, 2018

ஜித்தா (24 ஜூலை 2018): புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் முதல் குழு மதீனாவிலிருந்து மக்கா வந்தடைந்தது.

உலகெங்கிலிமிருந்து முஸ்லிம்கள் புனித கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்ற வழக்கம் போல் இவ்வருடமும் மக்காவுக்கு வர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலிருந்து முதல் ஹஜ் விமானம் சென்ற வாரம் மதீனா வந்தடைந்தது.

இதனை தொடர்ந்து மதீனாவிலிருந்து மக்காவிற்கு வந்த முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழுவை இந்திய கன்சுல் ஜெனரல் முஹம்மது நூர் ரஹ்மான் மற்றும் இந்திய துணை தூதரக அதிகாரி முஹம்மது ஷாஹித் ஆகியோர் வரவேற்றனர். அவர்களுடன் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபாரம் தன்னார்வலப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!