தமுமுக ஹஜ் தன்னார்வலர்கள் நியமனம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கல் நிகழ்ச்சி - வீடியோ!

July 28, 2018

ஜித்தா (28 ஜூலை 2018): ஜித்தா மேற்கு மண்டல தமுமுக கூட்டம் மற்றும் உறுப்பினர்கள் அட்டை வழங்கல் நிகழ்ச்சி ஜித்தா ஷரஃபிய்யா லக்கி தர்பார் அரங்கில் ஜூலை 27 ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முக்கிய அஜெண்டாவாக வரும் ஹஜ்ஜை முன்னிட்டு தன்னார்வப் பணிகளுக்காக தமுமுக சார்பில் நேரடியாக தன்னார்வலர்களை களமிறக்க முடிவு செய்யப் பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டது. மேலும் ஏற்கனவே தமுமுக சார்பில் தன்னார்வப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இவ்வருடம் நேரடியாகவே களத்தில் ஹஜ் தன்னார்வப் பணிகள் செய்யவுள்ளதால் தன்னார்வலர்களை அதிகப் படுத்துவது குறித்து விவாதிக்கப் பட்டது.

வீடியோ

மேலும் ஹஜ் முடிந்து தமுமுக மேற்கு மண்டல தேர்தல் நடத்துவது குறித்தும் உறுப்பினர்களை அதிகப் படுத்துதல் குறித்தும் விவாதிக்கப் பட்டது.

பழைய உறுப்பினர்களுக்கான புதுப்பிக்கப் பட்ட அட்டை மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப் பட்டது.

நிகழ்ச்சியில் மேற்கு மண்டல தலைவர் அப்துல் மஜீத், மேற்கு மண்டல துணைப் பொதுச் செயலாளர் இர்ஃபான் (மக்கா) மற்றும் ஜித்தா செயலாளர் இல்யாஸ் கெளவரவ ஆலோசகர் அஜ்வா நெய்னா மற்றும் தமுமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!