லூ லூ ஹைபர் மார்கெட்டின் அவசர அறிவிப்பு!

ஆகஸ்ட் 06, 2018

துபாய் (06 ஆக 2018): லூ லூ ஹைபர் மார்கெட் பெயரில் தொலை பேசி அழைப்பு மோசடி நடைபெறுவதாக, லூ லூ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக லூ லூ ஹைப்பர் மார்கெட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "லூ லூ ஹைப்பர் மார்கெட் பெயரில், ஆஃபர் குறித்தோ அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவதாகவோ உங்கள் தொலை பேசிக்கு ஏதேனும் அழைப்பு வந்தாலோ, அல்லது உங்கள் வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு விவரங்கள் குறித்து கேட்டாலோ கொடுக்க வேண்டாம் என்றும், இது முழுக்க முழுக்க ஒரு மோசடி கும்பலின் செயல் என்றும், லூ லூ ஹைப்பர் மார்கெட்டுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது.

மேலும் லூ லூ ஹைப்பர் மார்கெட் குறித்து ஏற்கனவே இதுபோன்று ஒரு மோசடி நடைபெற்றதாகவும், இதுகுறித்து புகார் அளிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!