கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது - அபுதாபி அய்மான் சங்கம் கோரிக்கை!

ஆகஸ்ட் 09, 2018

அபுதாபி (09 ஆக 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட வேண்டும் என்று அபுதாமி அய்மான் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி 07-08-2018 செவ்வாய் கிழமை மாலை 6.10 மணியவில் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் . அவர்கள் மறைவையொட்டி நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது . சர்வதேச தலைவர்கள் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

08-08-2018 புதன்கிழமை மாலை சென்னை கடற்கரை அண்ணா சமாதி அருகில் டாக்டர் கலைஞர் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது .

இந்நிலையில் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் இரங்கல் கூட்டம் இந்திய நேரப்படி கலைஞர் அடக்கம் செய்யப்பட்ட 2 மணி நேரத்தில் சரியாக இரவு 9.30 மணியளவில் நடைப்பெற்றது .

அய்மான் சங்க ஒருங்கிணைப்பில் அமீரக தமிழ் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீது தலைமை வகித்தார் .அய்மான் சங்க துணை பொதுச் செயலாளர் A.S.அப்துல் ரஹ்மான் ரப்பானி இரங்கல் கூட்டத்தை நெறிப்படுத்தினார்.

இரங்கல் கூட்டத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் கலை, இலக்கியம் , அரசியல் பணிகள் குறித்து அய்மான் சங்க பொதுச் செயலாளர் SAC ஹமீது , அமீரக திமுக தலைவர் சிம்ம பாரதி , அமீரக திமுக ஒருங்கிணைப்பாளர் S.S.மீரான் , அமீரக காயிதே மில்லத் பேரவை துணை பொதுச் செயலாளர் பரகத் அலி , துபாய் தொழில் அதிபர் ஹசீனா , அமீரக தமிழ் மக்கள் மன்ற தலைவர் சிவக்குமார் , இந்தியன் இஸ்லாமிக் சென்டர் தலைவர் பாவா ஹாஜி , இந்தியன் இஸ்லாமிக் சென்டர் பொதுச் செயலாளர் உஸ்மான் கராபத், அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஹுசைன் மக்கி ஆலிம் , இந்திய சமூக நல பேரவை தலைவர் நடராஜன் , எழுத்தாளர் கனவுப் பிரியன் யூசுப் , முஸஃப்பா பாதிரியார் அருட் தந்தை அனி சேவியர் , அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் பொருளாளர் ஹாஜி அஹமது , பாரதி நட்புக்காக ஹலீல் ரஹ்மான் , அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டல அமைப்புச் செயலாளர் ஆவை அன்சாரி , அய்மான் சங்க செயலாளர் ஃபிர்தவ்ஸ் பாஷா , அமீரக காயிதே மில்லத் பேரவை வடக்கு அமீரங்களின் செயலாளர் அஞ்சுக் கோட்டை அப்துர் ரஜாக் , அமீரக புகைப்பட கலைஞர் காயல் சுபஹான் ஆகியோர் உரையாற்றினர்.

கூட்டத்தில் தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் தொண்டுகளை பாராட்டி மத்திய அரசு கலைஞர் அவர்களுக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என முதலில் கோரிக்கை வைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டும் என இரங்கல் கூட்டத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டது .

அய்மான் சங்க செயலாளர் பூந்தை ஹாஜா நன்றி கூறினார் .

ஒரு நிமிடம் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்திய பின் கூட்டம் நிறைவுபெற்றது .அமீரக தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர் .

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!