ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவும் தன்னார்வ சேவையில் தமுமுகவினர் - வீடியோ!

August 11, 2018

மக்கா (11 ஆக 2018): ஹஜ் தன்னார்வ சேவையில் தமுமுகவினரும் இவ்வருடம் களமிறங்கியுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் உலகெங்கிலிருந்து ஹஜ் செய்ய புனித மக்காவிற்கு லட்சக் கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் செய்ய வருகை புரிகின்றனர். அந்த வகையில் இவ்வருடம் பல லட்ச முஸ்லிம்கள் மக்காவில் குவிந்துள்ளனர்.

இதில் முக்கியமாக இந்தியாவிலிருந்தும் லட்சக்கணக்கில் ஹஜ் யாத்ரீகர்கள் வந்துகொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ இவ்வருடம் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும் தன்னார்வ பணியில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் ஹஜ் முடியும் வரை தொடர்ந்து தன்னார்வ சேவை செய்வார்கள்.

தன்னார்வப் பணியில் மேற்கு மண்டல துணைப் பொதுச் செயலாளர் இர்ஃபான் (மக்கா) மற்றும்  கெளவரவ ஆலோசகர் அஜ்வா நெய்னா, ரிள்வான் (ஜித்தா) மற்றும் தமுமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் முக்கிய பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!