பக்ரீத் பண்டிகை தேதி அறிவிப்பு!

August 11, 2018

ரியாத் (11 ஆக 2018): இன்று துல் ஹஜ் பிறை தென்பட்டதை அடுத்து வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துல் ஹஜ் முதல் நாள் ஆகும்.

சனிக்கிழமை மாலை துல் ஹஜ் பிறை தென்படும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் இன்று மாலை துல் ஹஜ் பிறை தென்பட்டதாக சவூதி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஆகஸ்ட் 21 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இதுவரை அறிவிப்பு வெளியிடப் படவில்லை.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!