சவூதி: ஜித்தா மற்றும் ரியாத்தில் ததஜ சார்பில் ரத்த தான முகாம்!

August 13, 2018

ஜித்தா (13 ஜூலை 2018): சவூதி அரேபியா ஜித்தா மற்றும் ரியாத்தில் ததஜ சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

ஜித்தாவில் ஹஜ் செய்வதற்காக மக்காவிற்கு வரும் பயணிகளுக்கு முன்னேற்பாடாக (10-08-2018, வெள்ளிக்கிழமை) ஜித்தாவில் இரத்ததான முகாம் நடைபெற்றது. ஜித்தாவிலுள்ள கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையிலுள்ள இரத்த வங்கியில் நடைபெற்ற முகாமில் 137 பேரிடமிருந்து இரத்ததானம் பெறப்பட்டது.

இதில் பெண்களும் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்த இம்முகாம் மாலை 5 மணிக்கு நிறைவுற்றது.

அதேபோல ததஜ ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் இரத்ததான முகாம் (இந்த வருட ஹஜ் பயணிகளில் தேவைப்படுவோருக்காகவும் மற்றும் 72வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும்) வெள்ளிக்கிழமை 10/08/2018 அன்று நடைபெற்றது. இந்தமுகாமில் 136க்கும் மோற்பட்ட குருதி கொடையாளர்கள் பதிவு செய்து கொண்டு சுமார் 125 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!