ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவும் IFF பெண் தன்னார்வலர்கள் - வீடியோ!

August 13, 2018

மக்கா (13 ஆக 2018): புனித மக்காவில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவும் சேவையில் பெண் தன்னார்வலர்கள் பெருமளவில் இந்தியா ஃபரடர்னிட்டி ஃபாரம் கள்மிறக்கியுள்ளது.

வசதியும் உடல் ஆரோக்கியமும் உள்ளவர்கள் வாழ்வின் ஒரு முறையேனும் இந்த ஹஜ்ஜை நிறைவேற்றுவது கடமையாகும். அந்த வகையில் உலகம் முழுவதிலிருந்தும் 25 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் ஒவ்வொரு வருடமும் புனித மக்காவிற்கு சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றுவார்கள்.

அதில் முக்கியமாக இந்தியாவிலிருந்து வரும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உதவி புரிந்து வருகின்றன. அதில் குறிப்பிடத் தக்கவர்கள் இந்தியா ஃப்ரட்டர்ன்னிட்டி ஃபாரம் அமைப்பு.

வீடியோ

இவ்வமைப்பில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த சுமார் 1200 மேற்பட்ட தன்னார்வலர்கள் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவி புரிந்து வருகின்றனர்.

ஹஜ் முதல் விமானம் சவூதி வந்தடைவதிலிருந்து இவர்களின் சேவை தொடங்குகிறது. முதியவர்கள், உடல் நலம் இல்லதவர்கள், என பலருக்கும் இவர்களின் சேவை இன்றியமையாததாகும். சுமார் 14 வருடங்களுக்கும் மேலாக இவர்கள் ஹஜ் தன்னார்வ சேவை செய்து வருகின்றனர்.

இந்திய தூதரக அதிகாரிகளின் நன் மதிப்பைப் பெற்ற இவர்களில் பெண் தன்னார்வலர்களின் சேவை மிக முக்கியமானதாகும்.

பெண்களின் உடல் உபாதைகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய உதவி புரிவது, வயோதிக பெண்களுக்கு உதவி புரிவது என இவர்களின் மிக முக்கிய சேவையாகும். இதற்காக பெண் தன்னார்வலர்களுக்கு ஹஜ் தொடங்கும் முன்பு தனி பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது.

அதேபோல ஆண்களுக்கும் தனியாக தமிழ், மலையாளம், இந்தி, உருது, மற்றும் இதர இந்திய மொழிகளில் மாநிலங்கள் வாரியாக பயிற்சி அளிக்கப் பட்டு அவர்கள் எவ்வாறு ஹஜ் களத்தில் சேவை செய்ய வேண்டும் என்று விளக்கம் அளிக்கப் படுகிறது. அதன்படி அவர்கள் தனது சேவையை திறம்பட செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவ்வருடம் புனித மக்காவை சுற்றி தங்கியிருக்கும் பலருக்கும் குறிப்பாக பாதிக்கப் பட்ட உடல் நலம் குன்றியவர்கள் ஆகியோரை இந்தியா ஃப்ரடர்னிட்டி ஃபாரம் தொண்டர்கள் மக்கா மருத்துவ மனைகளில் அனுமதித்து அவர்களுக்க் உரிய உதவி புரிந்தனர்.

இதில் மிக முக்கியமாக தன்னார்வ தொண்டர்கள் ஒருங்கிணைப்பாளர் அப்துல்லா அபூபக்கர் புளிக்கல், கேப்டன் அப்துல் கஃபார், மங்களாபுரம் உபைத், சென்னை ஜமால், மும்பை அப்துல் மஜீது, மஞ்சேரி அன்வர் உள்ளிட்டோர் தலைமையில் தன்னார்வப் பணி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!