உலகில் அதிக ஹஜ் யாத்ரீகர்களை கொண்ட நாடு இந்தியா!

August 15, 2018

மக்கா (15 ஆக 2018): இவ்வருடம் இந்தியாவிலிருந்து 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 ஹஜ் யாத்ரீகர்கள் மக்கா வருகை புரிகின்றனர்.

உலகெங்கிலிருந்தும் மக்காவிற்கு வரும் ஹாஜிகளில் மூன்றாவது அதிக ஹஜ் யாத்ரீகர்களை கொண்ட நாடு இந்தியா. அந்த வகையில் இவ்வருடம் 1 லட்சத்து 75 ஆயிரத்து ஹஜ் யாத்ரீகர்கள் மக்காவிற்கு ஹஜ் செய்ய வருகை புரிகின்றனர். இதுவரை இந்தியாவிலிருந்து வந்த ஹஜ் யாத்ரீகர்களில் கூடுதலான ஹஜ் யாத்ரீகர்கள் இம்முறை வருகை புரிகின்றனர். இது உலகில் மூன்றாவது ஹஜ் யாத்ரீகர்களை கொண்ட நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு உண்டு.

மேலும் வேறு எந்த நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கும் தன்னார்வலர்கள் இந்த அளவிற்கு கிடைப்பார்களா என்றும் கூற முடியாது. பல நாட்டு ஹஜ் யாத்ரீகர்கள் மெச்சும் வகையில் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு தன்னார்வ அமைபுகள் உள்ள நாடும் இந்தியாதான். ஆனால் அவர்கள் இந்தியா என்று இல்லாமல் பல நாடு ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவி புரிவதும் கவனிக்கத் தக்கது.

அதேபோல ஹாஜிகள் காணாமல் போனால் அவர்களது அடையாள அட்டைகளில் கொடுக்கப் பட்டுள்ள எண்களை வைத்து விரைவாக கண்டு பிடிக்கும் வகையில் தொழில் நுட்ப வசதிகளையும் இந்தியன் ஹஜ் மிஷன் சிறப்பாக செய்துள்ளது.

24 மணிநேரமும் அவர்கள் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். மக்கா ஹரம் பள்ளிக்கு அருகில் பச்சை பிரிவில் 62 கட்டிடங்களும், மக்கா ஹரம் பள்ளியிலிருந்து 8 கி.மீ தூரம் உள்ள அஜீசியா பகுதியில் 377 கட்டிடங்களும் இந்தியன் ஹஜ் மிஷனுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. அனைத்தும் எல்லா வசதிகளும் கொண்ட கட்டிடங்களாகும்.

அஜீசியா -மக்கா ஹரம் போய் வர 400 பேருந்துகள் சுழற்சி முறையில் இயங்குகின்றன. ஹாஜிகளின் உடல் நலம் பேணுவதில் மிக முக்கியமாக இந்தியாவிலிருந்து 170 மருத்துவர்களும் 175 மருத்துவ உதவியாளர்களும் இந்தியாவிலிருந்து வருகை புரிந்துள்ளனர். அஜீசியா, மக்கா ஹரம் பள்ளி கட்டிடங்களில் மருத்துவர்கள் உதவி புரிவார்கள். மேலும் ரூ 4 கோடிக்கு இந்தியாவிலிருந்து மருந்துகள் கொண்டு வரப் பட்டுள்ளன.

அதிக உடல் நலக்குறைவு ஏற்பட்ட ஹாஜிகள் சவூதியின் மல்டி ஸ்பெஷல் மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள். சாதாரண பிரச்சனைகளை இந்த மருத்துவர்களே சரி செய்து விடுவார்கள். மக்காவைப் போலவே மதீனாவிலும் மருத்துவ ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

600 பேர் ஹாஜிகளுக்கு உதவி புரிவதற்காக இந்தியாவிலிருந்து வருகை புரிந்துள்ளனர். இவர்களில் 12 பேர் பெண்கள். இவர்களில் போலீஸ் துறையில் பணிபுரியும் பெண் அதிகாரிகளும் உண்டு.

இம்முறை வருகை புரியும் ஹாஜிகளில் 45 வயதிற்கு மேற்பட்ட உரிய ரத்த சொந்தம் (மஹ்ரம்) இல்லாத பெண்கள் 1300 பெண்கள் இம்முறை ஹஜ் செய்யவுள்ளனர். இவர்கள் அனைவரும் தனியாக மூன்று கட்டிடங்களில் தஙக வைக்கப் படுகின்றனர். இவர்களுக்கு தனி மருத்துவ மனை, தனி பேருந்து நிலையம் ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!