கேரள மக்களுக்காக அவசர குழு - ஐக்கிய அரபு அமீரக அதிபர் உத்தரவு!

August 18, 2018

துபாய் (18 ஆக 2018): வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் விதமாக அவசர குழுவை உருவாக்க ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீஃபா ஜியாத் அல் நஹ்யான் உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அம்மாநில பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகளின் மீட்புப்படைகள் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை செய்து வருகின்றனர். இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. எனினும் இழப்புகள் அதிக அளவில் இருக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் கேரள மக்களுக்காக அவசரக்குழுவை உருவாக்க உருவாக்க ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீஃபா ஜியாத் அல் நஹ்யான் உத்தரவிட்டுள்ளார். இது ஐக்கிய அரபு அமீரக ரெட் கிரசண்ட் தலைமையில் அமையும், என்றும் இதில் அனைத்து மனிதாபிமான அமைப்புகளும் உள்ளடங்கும் என்றும் தெரிகிறது.

இதன் மூலம் பல்வேறு உதவிகளை கேரள மக்களுக்கு வழங்கவும் போர்க்கால அடிப்படையில் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வழங்கப் படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த உதவியில் ஐக்கிய அரபு அமீரக வாழ் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!