ஹஜ்ஜின் முக்கிய இடமான அரஃபாவில் கடுமையான மழை!

August 20, 2018

மக்கா (19 ஆக 2018): ஹஜ்ஜின் முக்கிய பகுதியான அரஃபா பகுதியில் கடுமையான மழை பெய்துள்ளது.

ஹஜ் இன்று முதல் தொடங்கியுள்ளது. உலக முஸ்லிம்கள் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் மக்காவிற்கு சென்றுள்ள நிலையில் ஹஜ்ஜின் முக்கிய பகுதியான அரஃபா பகுதியில் ஞாயிறு மாலை கடும் மழை பெய்துள்ளது.

ஏற்கனவே வெயில் காரணமாக ஹஜ் யாத்ரீகர்கள் அவதிக்குள்ளாக நேரிடும் என அச்சம் அடைந்த நிலையில் அரஃபாவில் பெய்துள்ள மழை ஹஜ் யாத்ரீகர்களுக்கு வெயிலின் சூட்டை குறைக்க வாய்ப்பு உள்ளதாக கருதப் படுகிறது.

இதற்கிடையே மினாவிலிருந்து அரஃபாவிற்கு ஹஜ் யாத்ரீகர்கள் செல்லத் தொடங்கியுள்ளனர். நாளை (திங்கள்கிழமை) மாலை வரை அங்கு நடைபெறும் முக்கிய பிரார்த்தனையில் ஹஜ் யாத்ரீகர்கள் கலந்து கொள்வார்கள்.

Search!