IFF ஹஜ் தன்னார்வலர்கள் தொடக்க நிகழ்ச்சி - வீடியோ!

August 20, 2018

மக்கா (20 ஆக 2018): இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம் ஹஜ் தன்னார்வலர்கள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஹஜ்ஜின் முக்கிய தினமான இன்று அரஃபா தினத்தை ஒட்டி இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவும் விதமாக அரஃபாவில் தன்னார்வப் பணியை தொடங்கும் தன்னார்வலர்கள், கேப்டன் முனீஃப் பஜூர், முதஸ்ஸிர் நாசர் ஆகியோர் தலைமையில் சேவையை மேற்கொள்கின்றனர். இந்த நிகழ்வில்இந்திய ஹஜ் வெல்ஃபேர் ஃபாரம் தலைவர் அப்துல் அஜீஸ் கித்வை, கமர் சதா, ஷமீம் கவுசர், இம்ரான் கவுசர், நிஃமத்துல்லாஹ், ஃபைசுத்தீன், அஷ்ரஃப் முராயூர், மற்றும் தன்னார்வ சேவகர்கள் இந்திய தேசிய கொடியை ஏந்திப் பிடித்து தன்னார்வப் பணியை தொடங்கி வைத்தனர்.

மேலதிக தன்னார்வலர்களுடன் நாளை மினாவில் ஹஜ் யாத்ரீகர்களுக்கு சேவை புரிவார்கள். தொடக்கத்தில் கேரளா வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்காக பிரார்த்திக்கப் பட்டது.

வீடியோ

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!