23 லட்சம் முஸ்லிம்கள் ஒன்று கூடிய ஹஜ்ஜின் மிக முக்கிய தினம்!

August 21, 2018

மக்கா (21 ஆக 2018): ஹஜ்ஜின் மிக முக்கிய தினமான அரஃபா என்னும் இடத்தில் சுமார் 23 லட்சம் முஸ்லிம்கள் ஒன்று கூடினர்.

துல்ஹஜ் 8ஆம் நாளில் மினாவில் தங்கிய ஹாஜிகள் 9ஆம் நாளின் காலையில் அரபா மைதானத்தை நோக்கி நடந்து சென்றது வெண்மையான கடல்போல காட்சியளித்தது. ஹாஜிகளுக்கு இந்தநாள் அவர்களின் வாழ்நாளின் ஒரு மறக்க இயலாத நாளாகவே அமைந்திருக்கும்.

இந்த ஆண்டு 2.3 மில்லியன் ஹாஜிகள் தங்கள் கடமைகளை நிறை வேற்றுவதற்காக வருகை தந்திருக்கிறார்கள். இதில் 1,999,496 ஹாஜிகள் வெளி நாட்டிலிருந்தும் 240,747 பேர் உள் நாட்டிலிருந்தும் வந்திருக்கினறனர். இவர்களில் 86,000 பேர் ஈரான் நாட்டைச் சார்ந்த வர்கள், 300 பேர் கத்தாரை சார்ந்த வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரஃபாமலை, மக்கா விலிருந்து கிழக்காக சுமார் 20கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் தான் ஹாஜிகள் ஒன்றுசேர்வார்கள். சிலர் ஜபல்ரஹ்மா என்றழைக்கப்படும் நபி(ஸல்) அவர்கள் இறுதிப் பேருரையாற்றிய மலையிலும் ஒன்று இணைவார்கள்.

நமீரா மஸ்ஜிதில் நடைபெற்ற அரஃபா சிறப்பு பேருரை வழமையாக அரஃபா மைதானத்தில் நடைபெறும் சிறப்புபேருரை. இந்த ஆண்டும் நமீரா மஸ்ஜிதில் வைத்து டாக்டர் ஹூஸைன்பின் அப்துல் அஜீஸ் அல்ஷேக் அவர்களால் நடத்தப்பட்டது. இவர் மதீனா பள்ளியின் சொற் பொழிவாளர் ஆவார். ஷேக் அஜீஸ் அவர்கள் தனது உரையில் குறிப்பிடும் போது இஸ்லாம் மதிக்கத்தக்க பண் பாடுகளையும், நற் குணங்களையும் பின் பற்றுவதன் மூலம் மட்டுமே மறுமை வெற்றியை அடைய முடியும் என்றுகூறினார். மேலும், நபி(ஸல்) அவர்களின் போதனைகளை ஒவ்வொரு வரும் பின்பற்ற வேண்டும்.

இறைவனுடனான தங்களது நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். அமைதிமிக்க சமூகத்தை உருவாக்க ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டும் என குறிப்பிட்டார். தீயசெயல்கள் செய்வதைவிட்டும், வன்முறை பாதையில் திரும்புவதை விட்டும் இளைஞர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் எனவும் எடுத்துரைத்தார். பெற்றோர்கள் மற்றும்ஆசிரியர்களை கண்ணியப்படுத்தவும் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் வேண்டுமெனவும், திருக்குர்ஆன் உடனான நெருக்க்ததை அதிகரிக்கவும் வேண்டுமெனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.

இஸ்லாம் பாவச் செயல் களிலிருந்து விடுபட வலியுறுத்து கிறது, இதன்மூலம் முஸ்லிம் சமூகத்திடையே நல்லிணக் கத்தையும் சகோதரத்து வத்தையும் ஏற்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கை பராமரிப்பது இஸ்லாமிய சமூகத்தின் தனித்தன்மை எனவும், நேர்மையாளர்களையும், ஜகாத் மற்றும் தான தர்மங்கள் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான் எனவும் கூறினார்.

ஹஜ்ஜின் முக்கியமான கடமைகளில் ஒன்று அரஃபாமைதானத்தில் ஒன்றுகூடுவதாகும். எனவே, நோயாளிகள் மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த ஹாஜிகளை ஆம்புலன்ஸ்களில் வைத்தும் அங்குகொண்டுவரப்பட்டனர். இதன்மூலம்அ வர்களின் கடமையை முழுமையாக நிறைவேற்றிய மகிழ்ச்சியை அவர்களிடம் காணமுடிந்தது. அரஃபாநாளில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. சூட்டை தணிப்பதற்காக பல்வேறு டெண்ட்கள் மற்றும் தண்ணீர் தெளிப்பான்கள் மூலம் வெப்ப நிலைகட்டுக்குள்கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் அனைத்து ஹாஜிகளும் முழு ஆரோக்கியத்துடன் அரஃபாகடமையை நிறைவேற்றி திரும்பமுடிந்தது.

நமீராமஸ் மஸ்ஜிதின் சிறப்புப் பேருரையைத் தொடர்ந்து ஹாஜிகள் லுஹர் மற்றும் அசர் தொழுகையை சேர்த்து நிறைவேற்றினார்கள். தொடர்ந்து தங்களைப டைத்த இறைவனிடம் பாவமன்னிப்பு மற்றும் கருணையை வேண்டியவர்களாக அன்றைய மாலைவரை அங்கே இருந்து பிரார்த்தனை புரிந்தனர். சூரிய அஸ்தமனம் ஆகத் தொடங்கியதிலிருந்து ஹாஜிகள் அனைவரும் முஸ்தலிபாநோக்கிசென்றனர். இது சுமார் 9கிமீ தொலைவில் இருக்கிறது. சூரியஅஸ்தனம் ஆனதிலி துகள் உபயோகப் படுத்தப்பட்டன.

ஹாஜிகளுக்கு சேவை செய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கும்இந்தியாபிரடெர்னிடி ஃபோரம்அமைப்பு இந்த ஆண்டு பல்வேறு குழுக்களாக பிரிக்கப் பட்டு சேவையில் ஈடுபடுத்தப் பட்டனர். இவர்கள் அரஃபா தினத்தை ஒட்டி 11 கேப்டன்களின் தலைமையில் 250 சேவையாளர்கள் ஹாஜிகளுக்கு வழிகாட்டியும், மெட்ரோரயிலில் பயணம் செய்வதற்கும் உதவி செய்பவர்களாக இருந்தனர். இவர்கள் அரஃபா சேவையை துல்ஹஜ் 8ஆம் நாள் நள்ளிரவு முதல் மறுநாள் நள்ளிரவுவரை அங்கே பணி புரிந்தனர். இவர்களுக் குண்டான சிறப்பு பயிற்சியும் அரஃபா மற்றும் சுற்றியுள்ள இடங்கள் குறித்த வரைபடமும் வழங்கப்பட்டது. இதன் மூலம் வழி தவறிய மற்றும் இருப்பிடங்களை தவறவிட்ட ஹாஜிகளுக்கு அவர்களின் இருப்பிடங்களை எளிதில் கண்டறிந்து கொண்டு சேர்க்க முடிந்தது.

இவ்வாண்டு இந்தியன் ஹஜ்மிஷன் ஆதரவோடு இந்தியாபிரடெர்னிடி ஃபோரம்சார்பில்'சிறப்பு தேடல்குழு' உருவாக்கப்பட்டது. இவர்கள் இந்தியன் ஹாஜிகள் தங்கியிருந்த அரஃபா டெண்ட்களில்அவர்கள்அனைவரும் சென்ற பிறகு, அனைத்து ஹாஜிகளும் சென்றுவிட்டனரா என்று பரிசோதனை செய்து உறுதிபடுத்திக்கொண்டனர். இந்த குழு மறுநாளில் முஸ்தலிஃபாவிலும் இதேமாதிரியான பரிசோதனையை செய்ததும் குறிப்பிடத் தக்கது. மேலும், துல்ஹஜ் 13-ஆம் நாள் இவர்கள் மினாவின் இந்தியன் ஹாஜிகள் தங்கியிருக்கும் டெண்ட்களிலும் இதே பரிசோதனையை செய்ய இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!