ஹஜ்ஜில் திக்குத் தெரியாமல் இருந்த முதியவரை உரியவர்களிடம் ஒப்படைத்த தமுமுக தன்னார்வலர்கள்!

August 23, 2018

மக்கா (23 ஆக 2018): ஹஜ் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில் ஹஜ் யாத்ரீகர்கள் மினாவில் தங்கியிருந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சைத்தானுக்கு கல்லெறிதல் நடத்த செல்லும் போது கூட்டத்தில் திசை மாறிச் சென்று தங்குமிடம் தெரியாமல் தத்தளிப்பார்கள் அந்த வகையில் திக்குத் தெரியாமல் தவித்து நின்ற ஈரான் நாட்டு முதியவரை உரியவர்களிடம் ஒப்படைத்தனர் தமுமுக தன்னார்வலர்கள்.

வீடியோ

மேலும் தமுமுக தன்னார்வலர்கள் களப்பணியில் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர். அந்த வகையில் மிகவும் உடல் நலம் இல்லாமல் இருந்த ஹஜ் யாத்ரீகர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனையில் சேர்க்க உதவி புரிந்தனர். வழி தெரியாமல் இருந்த பலருக்கு வழி காட்டினர். உடல் முடியாத சிலரை உரிய இடங்களில் கொண்டு சேர்த்தனர்.

அதேபோல திக்குத் தெரியாமல் தவித்த ஈரான் நாட்டு முதியவரை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அனைவரும் தமுமுக தன்னார்வலர்களுக்காக நன்றியுடன் பிரார்த்தித்தது நெகிழ்வான தருணமாக இருந்ததாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!