மக்காவில் பெரிய மசூதியின் மாடியிலிருந்து குதித்து ஒருவர் தற்கொலை!

ஆகஸ்ட் 25, 2018

மக்கா (25 ஆக 2018): மக்கா பெரிய மசூதியின் மாடியிலிருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஹஜ் நேற்றோடு நிறைவடைந்த நிலையில் வெள்ளிக் கிழமை காலை ஒருவர் பெரிய மசூதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் விழுந்ததில் கீழே பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த இருவர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்டவர் அரபு நாடுகளில் ஒன்றைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!