ஈரான் மற்றும் ஈராக் நாடுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

August 26, 2018

பாக்தாத் (26 ஆக 2018): ஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லைகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஈராக் நாட்டின் பாக்தாத் நகரம் மற்றும் அந்நாட்டின் எல்லையை ஒட்டிய ஈரான் நாட்டின் கெர்மன்ஷா நகரம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், கெர்மன்ஷா நகரின் வடக்கு வடமேற்கு பகுதிக்கு 88 கிலோ மீட்டர் தொலைவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!