லிபியா சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்!

September 03, 2018

திரிபோலி (03 செப் 2018): லிபியா சிறையிலிருந்து சுமார் 400 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

லிபியாவின் தலைநகரான திரிபோலியில் போராளி குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்களால் இந்நகரின் அருகே உள்ள ஒரு சிறையிலிருந்து சிறைக் கதவுகளை உடைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 400 கைதிகள் தப்பியோடியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறையில் ஏற்பட்ட இரு தரப்பாரின் மோதலாலும், தப்பியோடுபவர்களை தடுத்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய சிறைக்காவலர்களால், சிறையில் ஏற்பட்ட கலவரத்தையும் அதன்பின் நடந்த நிகழ்வையும் தடுக்க இயலவில்லை.

தென் கிழக்கு திரிபோலியில் உள்ள அய்ன் ஜாரா சிறையில் உள்ள கைதிகள் பெரும்பாலும் காலஞ்சென்ற லிபிய தலைவரான கடாஃபியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

Search!